Tuesday, February 10, 2009

11.02.2009 புதன் என்ன நடக்கும்?

அமெரிக்க சந்தையின் கடும் வீழ்ச்சியால் நமது சந்தையும் Nifty Future சுமார் 40-60 புள்ளிகள் கீழே துவங்கவே வாய்ப்புள்ளது. Nifty Future 2850ஐ தக்க வைத்துக்கொள்ளும் பட்சத்தில், சந்தை மீள்வதற்கான வாய்ப்புள்ளது. 2830க்கு கீழே சென்றால் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும். 2850 வாங்குவதற்கான ஒரு வாய்ப்புள்ள இடம்.

10.02.2009 செவ்வாய் நடந்தது என்ன?

எதிர்பார்த்தபடியே துவக்கம் மந்தமாகவே இருந்தது. நிஃப்டி ஃப்யூச்சர் 2930க்கு மேல் முதல் இலக்கான 2950க்கு 2949 தொட்டது. 2949 லிருந்து Profit Booking & Fresh short மூலம் 2876 வரை வந்தது. காலையிலேயே குறிப்பிட்டது போல் 2900-2870 வாங்கும் வாய்ப்பாக அமைந்தது. 2876ல் திரும்பிய நிஃப்டி ஃப்யூச்சர் short covering உதவியோடு சுமார் 60 புள்ளிகள் எளிதாக உயர்ந்தது. முறையாக வர்த்தகம் செய்பவர்களை சந்தை ஏமாற்றவில்லை இன்று.
உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Monday, February 9, 2009

10.02.2009 செவ்வாய் என்ன நடக்கும்?

சந்தையின் துவக்கம் சற்றே மந்தமாக இருக்கும். 2900 முதல் 2870 வரை நிஃப்டி ஃப்யூச்சர் கிடைக்கும் பட்சத்தில் வாங்குவதற்கான வாய்ப்பாக அமையும். 2850க்கு கீழ் மட்டுமே பலம் இழக்க வாய்ப்புள்ளது. 2930 ஐ தாண்டும் பட்சத்தில் 2950, 2980 அதிகபட்சமாக 3000 அளவை தாண்டுவதற்கு வாய்ப்புள்ளது. 3000க்கு மேல் லாபத்தை எடுக்க தயங்க கூடாது. 2930க்கும் மேலே இன்று முடிவடைந்தால் சந்தை குறுகிய காலத்தில் மேலே செல்வது தவிர்க்க இயலாதது.

09.02.2009 திங்கள் நடந்தது என்ன?

நாங்கள் எதிர்பார்த்த‌ ச‌ப்போர்ட்டை த‌க்க‌ வைத்த‌தோடு, 2854 ஐ தாண்டிய‌வுட‌ன் காளை ச‌ந்தையை த‌ன் முழுக்க‌ட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட‌து. 2850 முதல் 2830 க்குள் நிஃப்டி சுற்றிக்கொண்டிருந்த பொழுது நிறைய தினசரி வர்த்தகர்கள் நிஃப்டியில் சார்ட் சென்றது உண்மை. அவர்கள் பெரும்பாலும் ஸ்டாப்லாஸ் கடைபிடிப்பதில்லை, எவ்வளவு மேலே சென்றுவிடும்?, சரி என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்தபோது எளிதாக் 2890யும் தாண்டியது. தினசரி வர்த்தகர்கள் நிஃப்டியில் தங்க்ள் சார்ட் கவர் செய்த துணையோடு நிஃப்டி 2918 ஐ தொட்டது. சப்போர்ட்டை விடாமல் ஒவ்வொரு தடையாக் தாண்டி நிஃப்டி சற்று கூடுதல் பல‌த்துடன் நிறைவடைந்துள்ளது.வார‌த்துவக்க‌ம் த‌ன்ன‌ம்பிக்கை தருகின்ற‌து
த‌ய‌வுசெய்து உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை தெரிவிக்க‌வும்

Sunday, February 8, 2009

சிமெண்ட் பங்குகள் எழுச்சி பெறலாம்

கடந்த சில வாரங்களாக சற்றே நிலைத்தன்மை பெற்றிருக்கும் சிமெண்ட் நிறுவன பங்குகள், மிக முக்கியமான தடையை தாண்ட வேண்டிய முக்கியமான கட்டத்தில் உள்ளன. அதை தாண்டி முடிவடையும் பட்சத்தில் 20 முதல் 30 சதவிகிதம் மேலே செல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. சிமெண்ட் நிறுவன பங்குகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

09.02.2009 திங்கள் என்ன நடக்கும்?

இன்று நிஃப்டி ஃப்யூட்சர் 2854 ஐ தாண்டும் பட்சத்தில் 2880 முதல் 2890 வரை செல்லலாம். 2880க்கு மேல் முடிவடைந்தால் வரும் நாட்களில் சுமார் 250 புள்ளிகள் வரை ஏற வாய்ப்புள்ளது. தற்போதைய சப்போர்ட் 2790 அளவில் உள்ளது. 2850 அளவில் பெரும்பான்மையானவர்களுக்கு விற்கவோ (அ)ஃபிரஷ் சார்ட் போகவோ தோன்றும், அந்த எண்ணம் எமோஷனலானதாககூட இருக்கும். நிஃப்டி இன்டிகேட்டர்க்ள் சந்தை மேலே செல்வதற்கு சாதகமாக இருக்கிறது. 2790க்கு கீழ் தொடர்ந்து முடிவடைந்தால் கரடி சந்தையை தன் கட்டுப்பாட்டில் எளிதாக் கொண்டுவரும்.

Saturday, February 7, 2009

09.02.09 -13.02.09 இந்த‌ வார‌ம்

கடந்த வாரம் வெறும் 114 புள்ளிகளுக்குள் விளையாடிய நிஃப்டி பியூட்சர். இந்த வாரம் கொஞ்சம் வேகத்தையும், சற்றே மலர்ச்சியையும் தரலாம்.

வரும் வாரத்தின் முடிவு சற்று முக்கியமானதாக தெரிகிறது. அதாவது இந்த வாரத்தின் அதிக பட்ச உயர‌மான 2842க்கு மேல் வசதியாக முடியும் பட்சத்தில் இந்த வாரத்தின் கீழ் நிலை அளவான 2628 மிக முக்கியமான சப்போர்ட்டாக இருக்கும்.

நிஃப்டியின் வார குறீயீடு 'டோஜி' வடிவில் முடிந்திருப்பது கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம். 2850க்கு மேலேயோ அல்லது 2630க்கு கீழோயோ முடியும் பட்சத்தில், சந்தை தெளிவான ஒரு பக்கமாக் செல்ல வாய்ப்பு உள்ளது
பெரும்பாலான‌ ந‌பர்க‌ள் எளிதாக‌ த‌ங்கள் க‌ருத்தை உங்கள் மேல் திணித்து ஒருவித‌ சுய‌ இன்ப‌த்தை பெறுவர். பொறுமையும், தெளிவும் முக்கியம்.